லண்டன்: மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. Brent கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 100 டாலரைத் தாண்டியது.
ஈரான் தொடர்பான மோதல்கள் மற்றும் செங்கடல் பகுதியில் அதிகரித்துள்ள ஹவுதி தாக்குதல்கள் சர்வதேச எண்ணெய் மற்றும் கப்பல் போக்குவரத்து சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
எரிபொருள் விலை உயர்வு உலக நாடுகளில் பணவீக்க அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்தால் போக்குவரத்து செலவு, உணவுப் பொருட்கள், தொழிற்சாலை உற்பத்திச் செலவு உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் அதன் தாக்கம் எதிரொலிக்க வாய்ப்புள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் மத்திய வங்கிகளும் பணவீக்க நிலவரத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றன.
