வாஷிங்டன்: நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி மூலம் இதுவரை கண்டிராத புதிய வகை விண்வெளிப் பொருளை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபஞ்சம் உருவான சில நூறு மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு உருவானதாக கருதப்படும் இந்தப் பொருளுக்கு ‘கருந்துளை நட்சத்திரம்’ என பெயரிடப்பட்டுள்ளது. ‘MoM-BH-1’ என அழைக்கப்படும் இதன் மையத்தில் சூரியனை விட சுமார் ஒரு லட்சம் மடங்கு நிறை கொண்ட மிகப்பெரிய கருந்துளை இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
கருந்துளையைச் சுற்றி அடர்த்தியான ஹைட்ரஜன் வாயு மேகம் காணப்படுவதாகவும், இதுவே மிகப்பெரிய நட்சத்திரம் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கண்டுபிடிப்பு தொடக்ககால பிரபஞ்சத்தில் மிகப்பெரிய கருந்துளைகள் எவ்வாறு உருவானது என்பதை புரிந்துகொள்ள முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
