மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதிர் முகமது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. அவரது மனைவி துன் டாக்டர் சித்தி ஹாஸ்மா முகமது அலி செப்டம்பர் 28-ம் தேதி தனது 100-வது வயதில் உயிரிழந்த நிலையில், இரண்டு நாட்களுக்குப் பிறகு மகாதிர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
70 ஆண்டுகால திருமண வாழ்க்கை
மகாதிர் முகமது – சித்தி ஹாஸ்மா தம்பதியினர் கடந்த ஆகஸ்ட் மாதம் 70-வது திருமண நாளை நிறைவு செய்திருந்தனர்.

மருத்துவரான சித்தி ஹாஸ்மா, மலேசியாவின் சுகாதாரம் மற்றும் சமூக நலத்துறையில் நீண்டகால பங்களிப்பைச் செய்தவர். செப்டம்பர் 28-ம் தேதி கோலாலம்பூரில் உள்ள தேசிய இதய சிகிச்சை மையத்தில் அவர் உயிரிழந்தார்.
மருத்துவமனையில் கண்காணிப்பு
மனைவியின் இறுதிச்சடங்கில் மகாதிர் முகமது சக்கர நாற்காலியில் பங்கேற்ற காட்சிகள் வெளியாகின.
அதன் பின்னர் செப்டம்பர் 30-ம் தேதி அவர் மருத்துவமனையில் கண்காணிப்புக்காக அனுமதிக்கப்பட்டதாக அவரது அலுவலகம் தெரிவித்தது. அவரது உடல்நிலை தொடர்பாக கூடுதல் மருத்துவ விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
மகாதிர் முகமது மலேசிய பிரதமராக இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
