வாஷிங்டன்: அமெரிக்காவின் முக்கிய நீர்த்தேக்கங்களில் ஒன்றான பவல் ஏரியின் நீர்மட்டம் வரலாறு காணாத அளவுக்கு குறைந்துள்ளது. இதனால் கொலராடோ நதி நீர் அமைப்பில் நெருக்கடி அதிகரித்துள்ளது.
பவல் ஏரியை தொடர்ந்து மற்றொரு முக்கிய நீர்த்தேக்கமான மீட் ஏரியும் கடுமையான நீர்மட்ட சரிவை சந்தித்து வருகிறது. தொடர் நீர் பயன்பாடு, வறண்ட குளிர்காலம் மற்றும் அதிகரித்து வரும் வெப்பநிலை ஆகியவை நீர்மட்டம் குறைவதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன.
இந்த நீர்த்தேக்கங்கள் அமெரிக்காவின் ஏழு மாநிலங்களில் 4 கோடிக்கும் அதிகமான மக்களுக்கும், விவசாயம், வனவிலங்குகள் மற்றும் நீர்மின்சார உற்பத்திக்கும் முக்கிய ஆதாரமாக உள்ளன. நீர்மட்டம் மேலும் குறைந்தால் நீர் விநியோகம் மற்றும் நீர்மின் உற்பத்தியில் கடுமையான பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
