பிரேசிலியா: 117 வயதான பிரேசிலிய கன்னியாஸ்திரி இனா கனேபரோ லூகாஸ் உலகின் வயதான நபராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
2019 ஆம் ஆண்டில் கின்னஸ் புத்தகத்தில் உலகின் வயதான நபராக பட்டியலிடப்பட்ட ஜப்பானைச் சேர்ந்த 119 வயதான கேன் தனகா இறந்ததைத் தொடர்ந்து, கனேபரோ லூகாஸ் உலகின் வயதான நபராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கனேபரோ ஜூன் 8, 1908 அன்று தெற்கு பிரேசிலில் ஒரு பெரிய குடும்பத்தில் பிறந்தார். அவரது பிறந்த தேதி இரண்டு வாரங்கள் தாமதமாக பதிவு செய்யப்பட்டதாக அவரது மருமகன் கூறினார். அவர் 1964 முதல் 1985 வரை ஆசிரியராக பணியாற்றினார். அவர் ஒரு சிறந்த கால்பந்து ரசிகராகவும் அறியப்படுகிறார்.
உலகின் வயதான நபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கனேபரோ, தனது நீண்ட ஆயுளுக்கு காரணம் “நான் இளமையாக இருக்கிறேன், அழகாக இருக்கிறேன், நட்பாக இருக்கிறேன்” என்று கூறினார்.