வாஷிங்டன்: “விரைவில் ரஷ்ய அதிபர் புடினுடன் பேசுவேன்,” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
உக்ரைன்–ரஷ்யா இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா பலமுறை முயற்சி செய்துள்ளது. சமீபத்தில் டிரம்ப் நடத்திய பேச்சுவார்த்தையும் எந்த தீர்வுமின்றி நிறைவடைந்தது. இதனால், போர் இன்னும் நீடித்து வருகிறது.

சமீபத்தில் சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில், புடின், ஜின்பிங், மோடி ஆகியோர் ஆலோசனை நடத்தியிருந்தனர். இதேசமயம், ஐரோப்பிய தலைவர்களுடனும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனிப்பட்ட ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் அமெரிக்காவின் முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் சந்தித்த பிறகு, டிரம்ப் பத்திரிகையாளர்களிடம் பேசினார். “புடினுடன் விரைவில் பேசுவேன்” என சுருக்கமாக கூறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
அவரது இந்த பதிலால், நீண்டகாலமாக நீடித்து வரும் உக்ரைன்–ரஷ்யா மோதல் விரைவில் முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.