இஸ்ரேல்: இந்தியாவில் இருந்து 16 ஆயிரம் கட்டுமான பணியாளர்கள் இஸ்ரேலில் பணிபுரிந்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் நாட்டில் கட்டுமான பணி மற்றும் விவசாயப் பணிகளில் மேற்கு கரை மற்றும் காசா முனையில் உள்ள பாலஸ்தீனர்கள் வேலைக்கு பணியமர்த்தப்பட்டனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் இஸ்ரேல் காசா மீது போர் தொடுத்தது.
அப்போது பாலஸ்தீன ஊழியர்கள் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைய இஸ்ரேல் அரசு தடைவிதித்தது. இதனால் மற்ற நாடுகளில் இருந்து கட்டுமான பணிக்கு ஆட்களை வரவழைக்க இஸ்ரேல் முயற்சி மேற்கொண்டது.
அந்த வகையில் இந்தியாவில் இருந்து 16 ஆயிரம் கட்டுமான பணியாளர்கள் இஸ்ரேலில் பணிபுரிந்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவை சேர்ந்த ராஜு நிஷாத் (வயது 35) என்பவர் மத்திய இஸ்ரேலில் உள்ள பீர் யாகோவ் என்ற இடத்தில் நடைபெறும் கட்டுமான பணியில் முன்னணி ஊழியராக திகழ்ந்து வருகிறார். அவருடன் ஏராளமான இந்தியர்கள் கட்டுமான உதவி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அடிக்கடி ஏர் ரெய்டு வார்னிங் வரும். அப்போது பாதுகாப்பான இடத்திற்கு சென்று விடுவோம். எச்சரிக்கை ஒலி நின்றவுடன் நாங்கள் வேலையை மீண்டும் தொடர்வோம் எனக் கூறும் நிஷாத் “இங்கே (இஸ்ரேலில்) பயப்படக் கூடியதற்கு ஒன்றுமில்லை” என சர்வ சாதாரணமாக தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலில் கட்டுமான தொழிலில் ஈடுபடும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு அதிக வருமானம் கிடைக்கிறது. இந்தியாவை விட மூன்று மடங்கு அதிகமாக கிடைக்கும் என்பதால் ஆயிரக்கணக்கான கி.மீ. கடந்த இஸ்ரேல் செல்வ முக்கிய காரணம் எனச் சொல்லப்படுகிறது.
ஆனால் காசாவில் போர் தீவிரமடைந்ததிலிருந்து, இஸ்ரேலின் கட்டுமானத் துறைக்கும் இந்தியர்களைக் கொண்டுவருவதற்கான முயற்சியை ஆட்சேர்ப்பு நிறுவனங்கள் தொடங்கியுள்ளன.