வங்கதேசம்: கனமழை வெள்ளதால் 20 லட்சம் மக்கள் பாதிப்பு… வங்காளதேசத்தில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. முக்கிய ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆற்றங்கரைகளில் வசிக்கும் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இதனால் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான தங்குமிடங்கள் திறக்கப்பட்டுள்ளது. நாட்டின் வடக்குப் பகுதியில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
மழை-வெள்ளத்துக்கு 8 பேர் பலியாகி உள்ளனர். வங்காளதேசத்தில் கோடைகாலத்தில் பெய்யும் பருவமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் தொடர்ந்து பாதிப்பு ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.