புதுடெல்லி: ஐக்கிய நாடுகள் சபையின் எதிர்காலம் குறித்த உச்சி மாநாடு நியூயார்க் நகரில் செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடக்கிறது.
இதில் பங்கேற்க பிரதமர் மோடி அமெரிக்கா செல்கிறார். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த இந்திய-அமெரிக்க சமூக அமைப்பு (ஐஏசியு) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
‘மோடி அன்ட் அமெரிக்கா: ப்ரொகிரஸ் டுகெதர்’ என்ற தலைப்பில் செப்டம்பர் 22-ம் தேதி நியூயார்க் நகரில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.
இதில் அமெரிக்காவின் 42 மாகாணங்களில் வசிக்கும் இந்தியர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பங்கேற்க 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.
இதில் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவம், ஜெயின், சீக்கியர் உள்ளிட்ட பல்வேறு மதங்கள் மற்றும் மொழிகள் உள்ளவர்கள் உள்ளனர். இங்கு பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
வர்த்தகம், அறிவியல், பொழுதுபோக்கு, கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.