ஜப்பான்: ஜப்பானில் கரையை கடந்த ஷான்ஷன் சூறாவளிக்கு 6 பேர் பலியாகி உள்ளனர். 125 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஜப்பானை தாக்கிய ஷான்ஷன் சூறாவளி புயலைத் தொடர்ந்து 4 நாட்களாக கனமழை பெய்துவருகிறது.
வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 6 பேர் உயிரிழந்த நிலையில், 125 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஒரே மாதத்தில், இரண்டாவது முறையாக சூறாவளி புயல் தாக்கி மின் விநியோகமும், போக்குவரத்தும் தடை பட்டதால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.