புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இடையே ஜூலை மாதம் நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 35 இந்தியர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. மொத்தம் 45 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில், 50க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இன்னும் விசாரணையில் உள்ளனர்.
MEA செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், ரஷ்ய ராணுவத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆறு இந்தியர்கள் சமீபத்தில் தாயகம் திரும்பியுள்ளனர், மேலும் பலர் விரைவில் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 91 இந்தியர்களில் 8 பேர் உயிரிழந்ததாகவும், 14 பேர் விடுவிக்கப்பட்டு தாயகம் திரும்பியதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்தியர்களை தவறாக வழிநடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடியிடம் ரஷ்ய அதிபர் புதின் உறுதியளித்ததன் பின்னணியில் இந்த விடுதலை முயற்சிகள் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.