2022 ஜனாதிபதித் தேர்தலில், இனாசியோ லுலா டா சில்வா வெற்றி பெற்று ஜனாதிபதியானார். அப்போது நான்கு ராணுவ அதிகாரிகளும், ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவரும் முதல் அதிபரை படுகொலை செய்து அரசை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டியிருந்தனர்.
போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: பிடிபட்ட 5 பேரிடம் நடத்திய விசாரணையில், துணை அதிபர் ஜெரால்டோ அல்க்மின், சுப்ரீம் கோர்ட் நீதிபதி அலெக்சாண்டர் டி மோரேஸ் ஆகியோரையும் கொல்ல சதி திட்டம் தீட்டியது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட ஐவரில் இராணுவத்தின் சிறப்புப் படையில் பயிற்சி பெற்ற 4 வீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற உயர் அதிகாரி ஒருவரும் அடங்குவர். அவர்கள் மீது நீண்ட நாட்களாக சந்தேகம் இருந்து வந்தது.
இந்நிலையில் தற்போது அவர்கள் 5 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளோம். போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.