ஜப்பான்: ஜப்பானில் உள்ள ஃபுகுஷிமா அணு உலையில் இருந்து இதுவரை 63,000 டன் கதிர்வீச்சு நீர் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுனாமியால் பாதிக்கப்பட்ட ஜப்பானின் ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தில் இருந்து இதுவரை 63 ஆயிரம் டன் கதிர்வீச்சு கலந்த கனநீர் பசிபிக் பெருங்கடலில் வெளியேற்றப்பட்டதாக டோக்கியோ மின்சக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
2011-ஆம் ஆண்டு மார்ச் 11-ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து உருவான சுனாமியால் ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தில் கடல் நீர் புகுந்தது. அணு உலைகள் சேதம் அடைந்து, கதிர்வீச்சு வெளியானதால் அணு மின் நிலையம் மூடப்பட்டது.
கதிர்வீச்சு கலந்த 13 லட்சம் டன்னுக்கும் அதிகமான தண்ணீர் பெரிய பெரிய தொட்டிகளில் தேக்கிவைக்கப்பட்டன. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மீனவர்கள் என பலதரப்பினரின் எதிர்ப்பையும் மீறி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல், கதிர்வீச்சு கலந்து நீர் படிப்படியாக கடலில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இப்பணி முழுமையாக நிறைவடைய 30 ஆண்டுகள் வரை ஆகும் என கருதப்படுகிறது.