சனா: இஸ்ரேலுக்கு எதிராக ஹவுதி படைகளால் கைப்பற்றப்பட்ட வணிகக் கப்பல் ஒரு வருடத்திற்குப் பிறகு விடுவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய இராணுவம் ஒன்றரை ஆண்டுகளாக காசாவில் ஹமாஸ் படைகளைத் தாக்கி வருகிறது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக, ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா படைகள் செங்கடலில் இஸ்ரேலுக்கும், ஏமன் வளைகுடாவில் ஹவுதி படைகளுக்கும் எதிராக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்தக் கடல் வழியாகச் செல்லும் கப்பல்களைத் தாக்கி கைப்பற்றி வருகின்றன.
அந்த வகையில், நவம்பர் 19, 2023 அன்று, ஹவுதி படைகள் கேலக்ஸி லீடர் வணிகக் கப்பலைக் கைப்பற்றின. பல்கேரியா, உக்ரைன், ருமேனியா மற்றும் மெக்சிகோ உட்பட அதில் இருந்த 25 பேர் கொண்ட குழுவினர் சிறைபிடிக்கப்பட்டனர். தற்போது, இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், ஹவுதி படைகள் கேலக்ஸி லீடர் கப்பலை விடுவிப்பதாக அறிவித்துள்ளன.
ஹவுதி உச்ச கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில், “பாலஸ்தீனத்தில் போர் நிறுத்தத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். 2023 இல் காசா போரின் போது கைப்பற்றப்பட்ட கேலக்ஸி லீடர்ஸ் குழு விடுவிக்கப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.