கனடா: கனடாவின் கியூபெக் மாகாணத்தில் அமேசான் கிளை அலுவலகங்கள் மூடப்பட்டதால் 1,700 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அமேசான் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமேசான் ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னணி நிறுவனமாகும்.
கரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. உலகின் முன்னணி நிறுவனங்களால் கூட இதை சமாளிக்க முடியவில்லை. எனவே, சம்பளத்தை குறைப்பது, ஊழியர்களை பணிநீக்கம் செய்வது போன்ற நடவடிக்கைகளை நிறுவனங்கள் எடுத்து வருகின்றன. ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னணி நிறுவனமான அமேசான், உலகம் முழுவதும் பல கிளை அலுவலகங்களைக் கொண்டுள்ளது.
ஆனால் கனடாவின் கியூபெக் மாகாணத்தில் பல கிளைகள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. எனவே, அங்குள்ள 7 அலுவலகங்களை மூடப்போவதாக அமேசான் அறிவித்துள்ளது. இதன் மூலம் அங்கு பணிபுரியும் 1,700 பேர் பணி நீக்கம் செய்யப்படுவார்கள். நிறுவனத்தின் இந்த அறிவிப்பு ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.