வங்கதேசத்தில் அரசியல் குழப்பத்தின் மத்தியில் செயின்ட் மார்ட்டின் தீவு மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. கடந்த ஆண்டு 30% வேலைவாய்ப்பு இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் 700 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.

இடைக்கால நிர்வாகியாக முகமது யூனுஸ் பொறுப்பேற்ற நிலையில், அவாமி லீக் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டது.ஹசீனா, யூனுஸ் மீது கடும் குற்றச்சாட்டுகள் கூறி வருகிறார். அவர் அமெரிக்காவின் ஒத்துழைப்புடன் நாட்டை தகைக்க முயல்கிறார் என்றும், செயின்ட் மார்ட்டின் தீவை விற்பனை செய்ய முயல்கிறார் என்றும் கூறியுள்ளார்.
இந்த தீவு வங்காள விரிகுடாவில் அமைந்துள்ளது. இது வங்கதேசத்தின் ஒரே பவள தீவு. சுமார் 3,700 மக்கள் வாழும் இத்தீவு மீன்பிடி, நெல் சாகுபடி, தென்னை விவசாயம், கடற்பாசி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.1947 வரை இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த தீவு, பாகிஸ்தானுக்கு சென்றது. 1971-இல் வங்கதேசம் உருவானபோது இத்தீவு வங்கதேசத்திற்கு சொந்தமானது.
St Martin’s தீவு பாதுகாப்பு ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. சீனாவின் தாக்கம் அதிகரித்து வரும் இந்த பகுதியில், அமெரிக்கா ராணுவ தளம் அமைக்க விரும்புவதாக கூறப்படுகிறது.அதனை ஒப்படைக்க ஹசீனா மறுத்ததைத்தான் தனது தந்தை ஷேக் முஜிபுர் ரகுமான் கொலைக்குக் காரணமாக்கியதாகவும், காலிதா ஜியா அந்த தீவை விற்பனை செய்ய முயன்றதாகவும் ஹசீனா குற்றம்சாட்டுகிறார்.
முகமது யூனுஸ் தனது பதவியை ராஜினாமா செய்ய முயற்சிக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருப்பதால், இந்த தீவுப் பிரச்சனை அரசியல் நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தி வருகிறது.செயின்ட் மார்ட்டின் தீவைக் கேட்கும் அமெரிக்கா, பதிலுக்கு கையில் இருப்பது வங்கதேச அரசியலை உலுக்கும் வன்முறை, குற்றச்சாட்டுகள் மற்றும் அதிகாரப் போட்டியே.