மாஸ்கோ: ரஷ்யாவின் கசான் நகரில் 16-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு வரும் 22 மற்றும் 23-ம் தேதிகளில் நடக்கிறது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இந்நிலையில், பிரிக்ஸ் மாநாட்டை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்த அதிபர் புதின், அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வர முதலீட்டு திட்டங்களுக்கு தேசிய டிஜிட்டல் கரன்சிகளை பயன்படுத்த வேண்டும்.
பொதுவான பிரிக்ஸ் நாணயத்திற்கான நேரம் இன்னும் வரவில்லை. ஆனால் பிரிக்ஸ் கூட்டமைப்பு டிஜிட்டல் கரன்சியின் பயன்பாட்டை ஆராய்ந்து வருகிறது. இதற்காக இந்தியா மற்றும் பிற நாடுகளுடன் இணைந்து ரஷ்யா செயல்பட்டு வருகிறது. பிரிக்ஸ் உறுப்புப் பொருளாதாரங்களின் கட்டமைப்பு மற்றும் தரத்தில் உள்ள வேறுபாடுகள் புதிய இருப்பு நாணயத்தை உருவாக்குவதற்கு எச்சரிக்கையான அணுகுமுறையை அவசியமாக்குகிறது. இந்த நாடுகள் தேசிய நாணயங்கள் மற்றும் புதிய நிதிக் கருவிகளைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.