நியூயார்க்: மார்ச் மாதம் அமெரிக்காவில் உள்ள பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான இன்டெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக லிப் பு டான் நியமிக்கப்பட்டார். மலேசியாவில் பிறந்த லிப் பு டான் 8 சீன நிறுவனங்களுடன் தொடர்பு வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் டாம் காட்டன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்டெல் தலைவர் பிராங்க் யெரிக்கு அவர் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். லிப் பு டான் முன்பு அவர் பணிபுரிந்த கேடன்ஸ் டிசைன்ஸ் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார்.

கேடன்ஸ் தனது தயாரிப்புகளை சீன இராணுவ பல்கலைக்கழகத்திற்கு சட்டவிரோதமாக விற்றுள்ளது.
இந்த சூழ்நிலையில், இன்டெல் தலைமை நிர்வாக அதிகாரியின் சீன வணிக உறவுகள் தொடர்பான தேசிய பாதுகாப்பு கவலைகளை மேற்கோள் காட்டி, லிப் பு டான் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார்.