வாஷிங்டன்: ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிரான உக்ரைனின் தற்காப்பு நடவடிக்கைகளை நாங்கள் ஆதரிக்கிறோம். உக்ரைனை ஆதரிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
உக்ரைன் இல்லாமல் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “ஐ.நா. மற்றும் உக்ரைன் இல்லாமல் போரை முடிவுக்கு கொண்டுவருவது சாத்தியமில்லை.
ஒருவேளை டொனால்ட் டிரம்ப் இப்போது அதிபராக இருந்தால், ரஷ்ய அதிபர் புடின் விரைவில் கியேவில் இருப்பார். இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை எடுப்பதில் இருந்து அமெரிக்கா ஒருபோதும் பின்வாங்காது.
ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிரான உக்ரைனின் தற்காப்பு நடவடிக்கைகளை நாங்கள் ஆதரிக்கிறோம். உக்ரைனை ஆதரிப்பதில் பெருமிதம் கொள்கிறேன். உக்ரைன் இல்லாமல் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை இல்லை.
அமெரிக்க மக்களுக்கும் இஸ்ரேலிய மக்களுக்கும் இடையே நல்ல நட்பு உள்ளது. இராஜதந்திர ரீதியில் இஸ்ரேலின் தலைமையின் கீழ் நாம் மேற்கொள்ளும் பணியானது நமது நாட்டின் கொள்கைகளை தெளிவுபடுத்துவதற்கான ஒரு தொடர்ச்சியான முயற்சியாகும்.
எனது பொருளாதார திட்டங்கள் அமெரிக்க பொருளாதாரத்தை பலப்படுத்தும். ஆனால் டிரம்பின் திட்டங்கள் அதை பலவீனப்படுத்தும்” என்று அவர் கூறினார்.
இந்த நேர்காணலுக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும் அழைக்கப்பட்டதாகவும், ஆனால் அவர் மறுத்துவிட்டதாகவும் தொலைக்காட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.