பெய்ஜிங்: சீனாவின் Guizhou மாகாணத்தில் கட்டப்பட்டு வரும் தொங்கு பாலம் Huajiang Canyon பள்ளத்தாக்கில் பாயும் Beiban ஆற்றைக் கடக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு முதல் ரூ.2200 கோடி செலவில் நடைபெற்று வரும் இந்த பணி 2200 கோடியில் பணிகள் நிறைவடைந்துள்ளன.
இந்த தொங்கு பாலம் ஜூன் மாதம் திறக்கப்பட உள்ளது. இரண்டு மைல் நீளமுள்ள இந்தப் பாலம் பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தை விட 200 மீட்டர் உயரம் கொண்டது. அதாவது 2050 அடி உயரத்தில் கட்டப்பட்டு வருகிறது. பாலத்தின் எஃகு கட்டமைப்புகள் சுமார் 22,000 மெட்ரிக் டன் எடையுள்ளதாகவும், மூன்று ஈபிள் கோபுரங்களுக்குச் சமமானதாகவும் கூறப்படுகிறது.

பயண நேரத்தை 1 மணி நேரத்தில் இருந்து 1 நிமிடமாக குறைக்கும் வகையில் பாலம் கட்டப்படுகிறது. Huajiang Canyon சஸ்பென்ஷன் பாலம் திறக்கப்படும் போது, அது உலகின் மிக உயரமான பாலமாக இருக்கும். டியூஜ் பாலம் ஏற்கனவே இதே பகுதியில் அமைந்துள்ளது. இது தற்போது உலகின் மிக உயரமான பாலமாக உள்ளது. இந்த பாலம் 883 அடி உயரம் கொண்டது. அந்த சாதனையை சீனா மீண்டும் முறியடிக்க உள்ளது.