பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூரின் போது ரபேல் போர் விமானங்கள் முக்கிய பங்காற்றியதாக உலக நாடுகள் ஏற்கனவே அங்கீகரித்துள்ளன. இந்த தாக்குதலின் வெற்றியைத் தொடர்ந்து, பிரான்ஸ் தயாரித்த ரபேல் விமானங்களுக்கு உலகளவில் பெரும் தேவை ஏற்பட்டது. பல நாடுகள் ரபேல் விமானங்களை வாங்க ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. குறிப்பாக இந்தியா, கத்தார், எகிப்து, கிரீஸ், குரோஷியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு 323 ரபேல் விமானங்கள் ஏற்கனவே விற்கப்பட்டுள்ளன.

இந்தோனேசியா மட்டும் 42 விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்திருப்பது இந்த வணிகத்திற்கான பெரிய முன்னேற்றமாகும். இந்நிலையில், ரபேல் விமானங்களின் உலக சந்தையை பாதிக்க, சீனா திட்டமிட்ட முறையில் தவறான தகவல்களை பரப்பி வருவதாக பிரான்ஸ் குற்றம் சாட்டியுள்ளது. சீனாவின் இந்த செயல், தனிக்கட்டுப்பாட்டை நிலைநாட்டும் நோக்கத்தோடு தங்கள் ராணுவ உபகரண விற்பனையை அதிகரிக்கவே நோக்கமிடப்பட்டதாக கூறப்படுகிறது.
பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தபடி, சீனா தற்போது ரபேல் விமானங்கள் குறித்து பொய்யான தகவல்களை உலக நாடுகளில் பரப்பி வருகிறது. குறிப்பாக, இந்தியா பாகிஸ்தானுக்கு நடத்திய தாக்குதலின் போது ரபேல் விமானம் பாகிஸ்தானால் சுட்டு வீழ்த்தப்பட்டது என்ற செய்தி முழுமையாக அஸாதாரணமானது என்றும், எந்த ஆதாரமும் இல்லாததெனவும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் ரபேல் விமானங்களின் மதிப்பை குறைத்து, சீன போர் விமானங்களை விற்பனை செய்யும் யுக்தியில் சீனா ஈடுபட்டு வருகிறது.
மேலும், அந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே, 1,000 புதிய சமூக ஊடக கணக்குகள் தொடங்கப்பட்டு, சீனாவின் ராணுவ சாதனைகள் மற்றும் விமானங்கள் பற்றிய பிரசாரங்களை விரிவாகச் செய்கின்றன என்று பிரான்ஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது. ரபேல் விமானங்களைத் தவிர்த்து சீன தயாரிப்புகளை ஏற்கும் விதமாக உலக நாடுகளைத் தாக்கும் இந்த நவீன தகவல் போர், பாதுகாப்புத் துறையில் புதிய சவால்களை எழுப்பியுள்ளது.