கராச்சி: பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரிக்கு உடல் நலத்தை பாதித்த பிரச்சினைகளுக்குப் பிறகு நடைபெற்ற மருத்துவ சோதனையில், அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் 69 வயதான அதிபர் ஆசிப் அலி சர்தாரி, கராச்சி அருகிலுள்ள நவாப்ஷாவுக்கு ரம்ஜான் தொழுகைக்கு சென்றபோது சுவாசப் பிரச்னைகள் மற்றும் காய்ச்சலுடன் அவதிப்பட்டார். இதன் பின்னர், அவரை நவாப்ஷாவிலிருந்து கராச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.

மருத்துவமனையில் நடந்த சோதனைகள் மற்றும் பரிசோதனைகளில், அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை பெறுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.