டெஹ்ரான்: ஈரானில் கடும் வெப்பச் சலனம் காரணமாக அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. ஈரானில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் நிலவி வருகிறது. தலைநகர் டெஹ்ரானில் நேற்று 42 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
கடும் வெப்பம் காரணமாக அரசு அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் அலுவலக நேரம் நேற்று பாதியாக குறைக்கப்பட்டது.
கடும் வெயிலில் இருந்து மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், மின்சாரத்தை சேமிக்கவும் நாடு முழுவதும் உள்ள வங்கிகள் மற்றும் அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாலை 5 மணி வரை மக்கள் பொது இடங்களில் நடமாட வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடுமையான வெப்பச் சலனம் காரணமாக மின் நுகர்வு அதிகரித்துள்ளதாகவும், கடந்த செவ்வாய்கிழமை மின் நுகர்வு 78,106 மெகாவாட் என்ற சாதனையை எட்டியதாகவும் ஈரானிய செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ தெரிவித்துள்ளது.