2016 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பு தனது காதல் விவகாரத்தை ரகசியமாக வைத்திருக்க டொனால்ட் டிரம்ப் ஆபாச நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு பணம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. டிரம்ப் ஏற்கனவே குற்றவாளி என நிரூபிக்கப்பட்டிருந்தாலும், மன்ஹாட்டன் நீதிமன்றம் சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்காமல் அவரை விடுவித்தது.
டிரம்ப் மீதான 34 குற்றச்சாட்டுகளையும் நீதிமன்றம் உறுதி செய்தது, ஆனால் அவர் ஜனாதிபதியாக பதவியேற்பதற்கு முன்பே இந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். தண்டனை ஜனவரி 10 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் கூறியிருந்தது.
டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக வரும் 20 ஆம் தேதி பதவியேற்க உள்ளார்.