வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று முன்தினம் வெள்ளை மாளிகையில் கூறியதாவது:- இந்திய பிரதமர் மோடி சமீபத்தில் வந்திருந்தார். நாங்கள் எப்போதும் நல்ல நண்பர்களாக இருந்தோம். உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இது பயங்கரமானது. அவர் (மோடி) ஒரு புத்திசாலி மனிதர், உண்மையில் எனது சிறந்த நண்பர். அவருடனான பேச்சு வார்த்தை சுமுகமாக இருந்தது.
இந்தியா-அமெரிக்கா இடையே சுங்கவரி பேச்சுவார்த்தை சிறப்பாக நடைபெற்று வருகிறது. இது நன்றாக வேலை செய்யும் என்று நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். கடந்த மாதம் அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, அதிபர் டிரம்பை சந்தித்தார். அப்போது, “அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் இந்தியா, இனி, இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளின் பொருட்களுக்கு வரி விதிக்கும் அதே விகிதத்தில், வரி விதிப்போம்.

இதே குற்றச்சாட்டை தொடர்ந்து கூறி வந்த டிரம்ப், தற்போது இந்தியாவுடனான கட்டண உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து வருவதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.