வாஷிங்டன்: 2020 தேர்தல் தோல்விக்குப் பிறகு வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறக் கூடாது என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் வருத்தம் தெரிவித்துள்ளார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நவம்பர் 5ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் தற்போதைய துணைத் தலைவர் கமலா ஹாரிஸும், குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்பும் போட்டியிடுகின்றனர். இதனிடையே, பென்சில்வேனியா தேர்தல் பிரசாரத்தில் டிரம்ப், ‘2020 தேர்தல் தோல்விக்குப் பிறகு நான் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியிருக்கக் கூடாது’ என்றார்.
அவர் மேலும் கூறுகையில், ‘நான் சென்ற நாளில் நமது நாட்டின் எல்லை பாதுகாப்பாக இருந்தது. தேர்தல் நாளில் சரியான நேரத்தில் மக்களிடம் பேசுவேன். “ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் நிற்கிறார்கள்.
நாளை நடைபெற உள்ள தேர்தலில் டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. முக்கிய தொகுதிகளில் மீண்டும் வாக்கு எண்ணிக்கைக்கு கோரிக்கை எழுந்தால், இறுதி முடிவு தெரிய பல நாட்கள் ஆகலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இதனால் அமெரிக்காவின் எதிர்காலத்தை பாதிக்கும் இந்த தேர்தல் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.