டென்னஸ்சீ: ஆபாச வீடியோ சம்பவத்திற்காக ஈஸ்ட்மேன் கிரெடிட் யூனியன் என்ற வங்கி கிளை, வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டு கொண்டுள்ளது.
அமெரிக்காவின் டென்னஸ்சீ மாகாணத்தில் ஜான்சன் சிட்டி பகுதியில் ஈஸ்ட்மேன் கிரெடிட் யூனியன் என்ற வங்கியின் கிளை அலுவலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த வங்கிக்கு வந்த தம்பதி டிக்டாக் வீடியோவுக்காக சில காட்சிகளை படம் பிடித்தனர். அப்போது அவர்கள் ஆபாச காட்சிகளை படம் எடுக்கும் வகையில், வங்கியில், தகாத முறையில் நடந்து கொண்டனர்.
இதனால், வங்கிக்கு வந்திருந்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கண்ணாடி ஜன்னல் குளிரில் உறைந்தது போன்று இருந்தது. அதற்குள் அவர்களின் ஆபாச வீடியோ எடுக்கப்பட்டு உள்ளது. இதனால், ஆபாச படம் தெளிவாக தெரியாத வகையில் இருந்தது. ஆனால், அவர்களின் செயல், வங்கி கிளையில் இருந்த அனைவராலும் பார்க்கும்படி இருந்தது.
எனினும், டிக்டாக்கில் அந்த வீடியோ வெளிவந்து , சமூக ஊடகங்களிலும் வைரலானது. இதனை லட்சக்கணக்கான முறை பலர் பார்வையிட்டு உள்ளனர். பொது இடத்தில் இதுபோன்று தகாத முறையில் நடந்து கொண்டதற்காக சமூக ஊடக பயனாளர்கள் பலரும், கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த ஆபாச வீடியோ சம்பவத்திற்காக அந்த வங்கி கிளை, வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டு கொண்டுள்ளது. அவர்கள் அந்த வங்கியின் ஊழியர்களா? என்ற விவரம் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.