அமெரிக்கா: வாடகை தாயாக பல பெண்களுடன் எலன் மஸ்க் ரகசிய டீலிங் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் என அமெரிக்க நாளிதழில் செய்தி வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே 14 குழந்தைகளுக்கு தந்தையான எலான் மஸ்க், பல பெண்களை X மூலம் தொடர்பு கொண்டு ரகசியமாக குழந்தைகளை பெற முயற்சிப்பதாக Wall Street Journal ரிப்போர்ட் வெளியிட்டுள்ளது.
வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற, பல பெண்களுடன் ரகசிய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாகவும், உலகளவில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்துள்ளதால் அவர் இப்படி செய்வதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், இதை வதந்தி என மஸ்க் மறுத்துள்ளார். இருப்பினும் அமெரிக்க மக்கள் மத்தியில் இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.