துருக்கியில், குர்தீஷ் பயங்கரவாதிகள் ஆயுதப்போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளனர். இதனால் 40 ஆண்டுகளுக்கு மேலாக இடம் பெற்ற துருக்கி-குர்தீஷ் மோதல் முடிவுக்கு வருவதாகத் தெரிகிறது. 1984 ஆம் ஆண்டு முதல் குர்தீஷ் தொழிலாளர் கட்சி (பி.கே.கே.) எனப்படுவோரின் பயங்கரவாத நடவடிக்கைகள் துருக்கியில் பல உயிரிழப்புகளை ஏற்படுத்தின.
இந்த குழுவின் தலைவர் அப்துல்லா ஒக்லான் 1999 ஆம் ஆண்டு இருந்து சிறையில் இருக்கும் நிலையில், பின்வரும் ஆண்டுகளுக்கு பல அமைதியான பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு, பல சமூகம் மற்றும் அரசியல் தலைமைகள் அவற்றை முடிவுக்கு கொண்டு வர முயற்சித்தனர்.
துருக்கியின் அதிபர் ரிகெப் டய்யீப் எர்டோகன், தனது பதவி காலத்தில் இந்த பிரச்சினையை தீர்க்க பல முயற்சிகள் மேற்கொண்டுள்ளார். சமீபத்தில், அரசியல் தலைவர்கள் அப்துல்லாவை சந்தித்து, அவரை வன்முறையை நிறுத்துவதற்கான சமரசதிற்கு அழைத்தனர். இத்துடன், குர்தீஷ் பயங்கரவாதிகள் தங்களது ஆயுதங்களை கைவிடுவதாக அறிவித்துள்ளனர்.
‘பைராட் நியூஸ் ஏஜன்சி’ என்ற வழியாக வெளியிட்ட அறிக்கையில், குர்தீஷ் அமைப்பின் தலைவர் அப்துல்லா ஓக்லான் உத்தரவின்படி, அமைதி மற்றும் ஜனநாயக சமூகம் உருவாக்கப் படுவதாக குறிப்பிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், “உடனடியாக போர் நிறுத்தம் அமலுக்கு வருகிறது, மேலும் குர்தீஷ் அமைப்பில் யாரும் ஆயுத தாக்குதலில் ஈடுபட மாட்டார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கி, ஈராக், ஈரான் மற்றும் சிரியாவை உள்ளடக்கிய குர்தீஷ் பிராந்தியத்தில் புதிய வரலாறு எழுதப்படும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
துருக்கி அதிபர் எர்டோகன், 2028 ஆம் ஆண்டு அவரது பதவிக்காலத்தை முடிக்கவுள்ள நிலையில், அவரின் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க குர்தீஷ் ஆதரவு முக்கியமாக கருதப்படுகிறது. அதனால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும், சிரியா மற்றும் லெபனான் போன்ற நாடுகளில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் மற்றும் பயங்கரவாதிகளின் பலவீனமாதலின் காரணமாக, குர்தீஷ் பயங்கரவாதிகள் இந்த முடிவுக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.