வங்கதேசம்: முன்னாள் அமைச்சர் கைது… வங்கதேசத்தின் முன்னாள் அமைச்சரும், அவாமி லீக் தலைவருமான ஜுனைத் அகமது கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாடு செல்வதற்காக டாக்கா விமான நிலையத்தில் காத்திருந்தபோது ஜுனைத் அகமதை வங்கதேச ராணுவம் கைது செய்தது.
வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு கலவரம் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதையடுத்து, அவர் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மீது தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.