
பெய்ஜிங்: 2020-ல், கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் ரோந்து செல்வது தொடர்பாக இந்திய மற்றும் சீன ராணுவங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. சீன வீரர்கள் நடத்திய தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பதிலுக்கு இந்திய ராணுவம் பல சீன வீரர்களை தாக்கி கொன்றது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் கடும் சீர்குலைவு ஏற்பட்டது.
பதற்றம் காரணமாக இரு நாட்டு ராணுவமும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் சூழல் உருவானது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பல சுற்று பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இந்நிலையில் எல்லையில் ரோந்து பணி மற்றும் ராணுவத்தை வாபஸ் பெறுவது தொடர்பாக கடந்த மாதம் இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது.

இதனால் கிழக்கு லடாக் எல்லையில் கடந்த 4 ஆண்டுகளாக நீடித்து வந்த பதற்றம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் சீன ராணுவ அதிகாரி வூ கியான் பேட்டியளித்தபோது, “இந்த ஒப்பந்தத்தின் மூலம் கிழக்கு லடாக்கில் 4 ஆண்டுகளாக நீடித்து வந்த முட்டுக்கட்டைக்கு தீர்வு கிடைத்துள்ளது.
அண்மையில் லாவோஸில் நடைபெற்ற பிராந்திய பாதுகாப்பு மாநாட்டில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் சீன பாதுகாப்பு அமைச்சர் டோங் ஜுன் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது. இரு தரப்பினரும் ஒப்பந்தத்தை செயல்படுத்தி வருகின்றனர். இதில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது,” என்றார்.