நியூயார்க்: , இந்தியர்கள் உள்பட வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் வேலை செய்வதற்காகப் பெறக்கூடிய ஹெச்-1பி விசா (H-1B Visa) பெறுவதற்கு, ஆண்டுக்கு 1 லட்சம் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் 88 லட்சம் ரூபாய்) பணம் செலுத்த வேண்டும் என புதிய உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது..
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் புதிது புதிதாகப் பிரச்னைகளைக் கிளப்பி வருகிறார். ஏற்கெனவே இந்தியப் பொருள்கள் மீது 50% வரி விதித்துவிட்டார்.
இப்போது, இந்தியர்கள் உள்பட வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் வேலை செய்வதற்காகப் பெறக்கூடிய ஹெச்-1பி விசா (H-1B Visa) பெறுவதற்கு, ஆண்டுக்கு 1 லட்சம் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் 88 லட்சம் ரூபாய்) பணம் செலுத்த வேண்டும் என புதிய உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.
அமெரிக்காவில் ஏராளமான இந்தியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கிருப்பவர்களும் பலர் அமெரிக்காவுக்குச் செல்ல வேண்டுமெனக் கனவுகளைக் கொண்டுள்ளனர். குறிப்பாக, ஐ.டி துறையில் ஏராளமானவர்கள் அமெரிக்கா செல்கின்றனர்.
இந்நிலையில் இந்தியர்கள் உள்பட வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் வேலை செய்வதற்காகப் பெறக்கூடிய ஹெச்-1பி விசா (H-1B Visa) பெறுவதற்கு, ஆண்டுக்கு 1 லட்சம் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் 88 லட்சம் ரூபாய்) பணம் செலுத்த வேண்டும் என புதிய உத்தரவில் கையெழுத்திட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.