வாஷிங்டன்: அமெரிக்காவில் கடும் பனி மற்றும் மோசமான வானிலை காரணமாக 7,000க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கடுமையான வானிலை காரணமாக, அமெரிக்கா முழுவதும் விடுமுறை பயணங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
பனி, மழை மற்றும் சூறாவளி காரணமாக மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். கலிபோர்னியாவில் பலத்த காற்று மற்றும் கனமழை சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் 7,000 க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகியுள்ளன, மேலும் 200 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அட்லாண்டாவில் உள்ள ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் சர்வதேச விமான நிலையத்தில், மூன்றில் ஒரு பங்கு விமானங்கள் தாமதமாகி வருகின்றன. டெக்சாஸ் மற்றும் லூசியானா உள்ளிட்ட தென்கிழக்கு அமெரிக்காவின் சில பகுதிகளில் கடுமையான சேதம் பதிவாகியுள்ளது.
டெக்சாஸின் பிரஸ்பைடிரியன் பகுதியில் சூறாவளி காரணமாக ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். பல வீடுகள் மற்றும் பள்ளிகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.