இஸ்ரேல் : இஸ்ரேலில் நடந்த ஹோலி கொண்டாட்டத்தில் 3 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர்.
இஸ்ரேலில் வண்ணத் திருவிழாவான ஹோலி மற்றும் யூத திருவிழாவான பூரிம் ஆகிய இரண்டு விழாக்களையும் ஹிந்துக்கள் மற்றும் இஸ்ரேலியர்கள் 3000 பேர் இணைந்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஜாபா துறைமுகத்தில் டெல் அவிவ் நகர நிர்வாகத்துடன் இணைந்து ஹிந்து மிஷன், இந்த இரு திருவிழாக்களை கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்திருந்தது.
இது நாட்டின் கலாசார பன்முகத்தன்மை மற்றும் ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தியது.
இரண்டு திருவிழாக்களும், வெவ்வேறு மத பாரம்பரியங்களைக் கொண்டிருந்தாலும், மகிழ்ச்சி மற்றும் சமூக ஒற்றுமை போன்ற பொதுவான கருப்பொருள் உடன் பலரும் இந்த விழாவில் பங்கேற்றனர்.
பாரம்பரிய இசை, நடனம் மற்றும் வண்ணப் பொடிகளை வீசி அனைவரும் விழாவை உற்சாகத்துடன் கொண்டாடினர். இஸ்ரேலில் ஹோலி மற்றும் பூரிம் ஒரே நேரத்தில் கொண்டாடப்படுவது, இந்தியா மற்றும் இஸ்ரேலுக்கு இடையே வளர்ந்து வரும் கலாசார உறவுகளை எடுத்துக்காட்டுவதாக இருந்தது.