தரம்சாலா: திபெத்திய ஆன்மீகத் தலைவர் டென்சின் கியாஸ்டாவ் 14-வது தலாய் லாமா ஆவார். தர்மசாலா அருகே உள்ள தலாய் லாமா கோவிலில் அவரது 90-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும்.
இதன் ஒரு பகுதியாக, தலாய் லாமாவின் நீண்ட ஆயுளுக்காக நேற்று பிரார்த்தனை நடைபெற்றது. மத்திய சிறுபான்மை விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு, அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு, பிரபல ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெர் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

தலாய் லாமா, “பல தீர்க்கதரிசனங்களைப் பார்க்கும்போது, அவலோகிதேஸ்வரரின் ஆசிர்வாதம் எனக்கு இருப்பதாக உணர்கிறேன்.
இதுவரை, நான் மக்களுக்கு என்னால் முடிந்ததைச் செய்துள்ளேன். இன்னும் 30-40 ஆண்டுகள் வாழ நம்புகிறேன். இதுவரை, உங்கள் பிரார்த்தனைகள் பலனளித்துள்ளன.”