பிரித்தானிய தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சியின் தோல்விக்கு நான் முழுப்பொறுப்பேற்கிறேன் என்று ரிஷி சுனக் கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது
தொழிற்கட்சியின் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்க நான் கீர் ஸ்டார்மரை தொடர்பு கொண்டேன். இன்று முதல் அதிகாரம் அமைதியாக கை மாறிவிட்டது. இந்த புதிய அரசாங்கம் நமது நாட்டின் எதிர்காலத்திற்கான நம்பிக்கையைத் தரும் என்று நம்புகிறேன்.
இந்தத் தோல்விக்கு நான் முழுப் பொறுப்பேற்கிறேன். மன்னிக்கவும் என்றார். ரிஷி சுனக்கின் கட்சி தேர்தலில் தோல்வியடைந்தாலும் அவர் வடக்கு இங்கிலாந்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
பிரிட்டனில் 14 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த தொழிலாளர் கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மர் இந்த வெற்றியின் மூலம் பிரிட்டனின் பிரதமராகப் பதவியேற்கிறார். இந்நிலையில் பிரிட்டன் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சியின் தோல்வியை ஒப்புக்கொண்டு பிரதமர் ரிஷி சுனக் பேட்டியளித்த போது, யூடியூபர் நிகோ ஓமிலானா எல் என்ற எழுத்து அச்சிடப்பட்ட காகிதத்தை கையில் வைத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.