அமெரிக்கா: அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்றதில் இருந்து வரி விதிப்பு ஏற்பட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஈரானிய எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானிய எண்ணெய் மற்றும் பெட்ரோ கெமிக்கல் பொருள்களை வாங்கும் நாடுகள் அல்லது தனிநபர்கள் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
இவ்வாறு பொருட்களைக் கொள்முதல் செய்யும் நாடுகள் இரண்டாம் நிலை தடைகளை எதிர்கொள்ளும். அந்த நாடுகள் இனி அமெரிக்காவுடன் வணிகம் செய்ய அனுமதிக்கப்படாது என்றும் அறிவித்துள்ளார்.
முன்னதாக, இதே காரணத்திற்காக சீன நிறுவனம் மீது அமெரிக்கா தடை விதித்தது. அதிபராக பொறுப்பேற்றதிலிருந்து டிரம்ப் மேற்கொண்டு வரும் பல்வேறு செயல்களுக்கு அமெரிக்காவிலேயே எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு வரி உட்பட பல்வேறு அதிரடி அறிவிப்புகளுக்கு பின்னணியில் எலான் மஸ்க் இருப்பதாக அமெரிக்கர்கள் குற்றம் சாட்டுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.