புதுடெல்லி: இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியந்தா 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வந்த அவரை பிரதமர் மோடி நேற்று வரவேற்றார். பின்னர் இருதரப்பு உறவுகள் குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில், கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் ஒப்பந்தம் கையெழுத்தானது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, “அதிபர் சுபியந்தாவை வரவேற்பதில் இந்தியா பெருமை கொள்கிறது. இந்தியாவும் இந்தோனேசியாவும் பல்வேறு பலதரப்பு மன்றங்களில் நெருக்கமாக ஒத்துழைக்கின்றன. இந்தோனேசியாவின் பிரிக்ஸ் உறுப்பினரை நாங்கள் வரவேற்கிறோம்.