வாஷிங்டன்: இந்தியா-சீனா உறவு குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர், “இந்தியா அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடு. ஆனால், சீனாவுடன் இந்தியா நெருக்கம் காட்டுவது எங்களுக்கு கவலையாக உள்ளது” என்றார்.
சமீபத்தில், இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கியதால் அமெரிக்கா 50 சதவீத வரி விதித்தது. இதனால் உறவில் பதற்றம் ஏற்பட்டது. ஆனால், அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் இந்திய பிரதமர் மோடி இருவரும் “நட்பு உறவை மேலும் வலுப்படுத்துவோம்” என்று உறுதி தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்க தூதர் கோர், “வர்த்தக பிரச்னைகள் விரைவில் தீர்க்கப்படும். இந்தியா-அமெரிக்கா இடையே பொதுவான பல இலக்குகள் உள்ளன. சீனாவுடன் இருப்பதை விட, அமெரிக்காவுடன் இந்தியாவுக்கு அதிகமான ஒற்றுமைகள் உள்ளன. இந்தியாவை சீனாவிலிருந்து விலக்கி எங்கள் பக்கம் கொண்டுவருவது முன்னுரிமை” என்று வலியுறுத்தினார்.
அவரது இந்த கருத்து, இந்தியாவின் வெளிநாட்டு கொள்கையில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவுடன் சமாதானமும், அமெரிக்காவுடன் நெருக்கமும் — இரண்டையும் ஒரே நேரத்தில் பேணும் சவாலில் இந்தியா சிக்கியுள்ளது.