இந்தோனேஷியா: உலகில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் அதிகம் உள்ள நாடுகளில் ஒன்றான இந்தோனேஷியா, அதை குறைக்க பள்ளி மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தோனேஷியாவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள பிரபு சுபியான்தோ வரும் 20-ம் தேதி அதிகாரப்பூர்வமாக தனது பணிகளை தொடங்குகிறார். இந்தோனேசியாவில் 3-ல் 1 குழந்தை ஊட்டச்சத்து குறைபாடுடையது.
இதை போக்க, 8.3 கோடி குழந்தைகளுக்கு சத்தான இலவச மதிய உணவு வழங்குவதாக தேர்தல் வாக்குறுதி அளித்தார். அவரது கனவுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, மேற்கு ஜாவாவின் சுகவிலில் உள்ள 20 பள்ளிகளில் சோதனை அடிப்படையில் மதிய உணவு வழங்கப்படுகிறது.
அரிசி, வறுத்த காய்கறிகள், வேகவைத்த முட்டை, பால் மற்றும் பழங்கள் தினமும் 3200 பேருக்கு வழங்கப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி முதல் நாடு முழுவதும் இத்திட்டம் அமல்படுத்தப்படும்.
17,000 தீவுகளைக் கொண்ட நாட்டில், ஒவ்வொரு நாளும் 8.3 மில்லியன் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்குவது மிகப்பெரிய சவாலாக உள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.