மேற்க்காசியாவில் நீண்டகாலமாக இருந்து வரும் ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான எதிர்மறை உறவு, சமீப காலங்களில் மேலும் தீவிரமடைந்துள்ளது. இரு நாடுகளும் ஒருவரையொருவர் எதிரியாகவே பார்க்கின்றன. இராணுவம், உளவுத்துறை மற்றும் அதிரடிப் போர் நடவடிக்கைகள் மூலமாகவே இவர்கள் நேரடியாக மோதும் சூழல் உருவாகியுள்ளது.

இஸ்ரேல், ஈரானின் அணு திட்டங்கள் மற்றும் ஹமாஸ், ஹெஸ்பொல்லா போன்ற அமைப்புகளுக்கு அது வழங்கும் ஆதரவை விமர்சிக்கிறது. இதன் காரணமாக, ஈரானின் முக்கிய ராணுவ நிலையங்கள் மீது இஸ்ரேல் நேரடியாக தாக்குதல் நடத்தியது. இதில் ஈரானுக்கு பல ராணுவ இழப்புகள் ஏற்பட்டன.
இதற்கு பதிலடியாக ஈரான், இஸ்ரேலை குறிவைத்து தன்னை பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேற்கொண்டது.சமீபத்தில், ஈரான், ‘இஸ்ரேல் நாடாகவே இல்லை’ என்று கூறும் வகையில், சர்ச்சைக்குரிய ஒரு உலக வரைபடத்தை வெளியிட்டது. இதில், ஜெருசலேம் உள்ளிட்ட பகுதிகள் இஸ்ரேலின் பகுதிகளாகக் காட்டப்படவில்லை.
இது சர்வதேசத்தில் பெரும் எதிர்வினைகளை ஏற்படுத்த, ஈரான் பின்னர் விளக்கம் அளிக்கவும் நேரிட்டது.இவ்வாறு, இரு நாடுகளும் நேரடியாக யுத்தத்தில் ஈடுபடவில்லை என்றாலும், பல இடைத்தரகர் நாடுகள், அமைதி முயற்சியில் ஈடுபட்டாலும், நிலைமை இன்னும் பரபரப்பாகவே உள்ளது. அந்த பகுதியில் நடக்கும் எந்த தவறான கணிப்பும், உலகளாவிய பெரும் முடிவுகளை உண்டாக்கும் என்பதில்தான் சிறப்பு கவனம் தேவைப்படுகிறது.