ஈரான்: இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் தளபதி அமீர் அலி ஹஜிஜதே இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஈரான் உறுதி செய்துள்ளது.
காசா மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென ஈரான் மீது வான் தாக்குதல் நடத்தியது. ஈரானிய புரட்சிகர காவல்படை தலைமையகம் மற்றும் தெஹ்ரான் விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இதில் ஈரானின் முக்கிய ராணுவ தளபதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.இந்த நிலையில் தளபதி அமீர் அலி ஹஜிஜதே இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஈரான் உறுதி செய்துள்ளது. இவர் ஈரானிய புரட்சிகர காவல்படையின் ஏவுகணை திட்டத்தின் தளபதியாக இருந்தார்.
பாலிஸ்டிக் ஏவுகணை கிடங்குகளை மேற்பார்வையிடும் படைகளின் முக்கிய கமாண்டராக செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.இஸ்ரேல் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் சூளுரைத்துள்ளது. இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.