காஸா: விடுவிக்கப்பட வேண்டிய மூன்று இஸ்ரேலிய பிணைக் கைதிகளின் பெயர்களை ஹமாஸ் வெளியிட்டதைத் தொடர்ந்து காசாவில் நேற்று போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிகளுக்கு இடையே ஒரு வருடத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் போரில் 47,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
கத்தாரும் அமெரிக்காவும் இரு தரப்புக்கும் இடையே போர்நிறுத்தத்தை ஏற்படுத்த பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தின. பிணைக் கைதிகளை விடுவித்தால் போரை நிறுத்துவோம் என இஸ்ரேல் நிபந்தனை விதித்துள்ளது. இந்நிலையில் பணயக்கைதிகள் பட்டியலை ஹமாஸ் அனுப்பியதை அடுத்து காஸாவில் நேற்று மதியம் 2.45 மணி முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.
இதைத் தொடர்ந்து, செஞ்சிலுவைச் சங்கம் மூலம் மூன்று இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விரைவில் விடுவிக்கப்படவுள்ளனர். இதைத் தொடர்ந்து, மீதமுள்ள 98 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் அடுத்தடுத்த சுற்றுகளில் விடுவிக்கப்பட உள்ளனர்.