இஸ்ரேல்: காசா சிட்டியில் இருந்து இரண்டு பணயக்கைதிகள் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது என்று இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
காசா சிட்டியில் இருந்து இரண்டு பயணக்கைதிகள் உடல்கள் மீட்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளார். காசா சிட்டி மீது தாக்குதலை அதிகரித்துள்ள நிலையில், இந்த உடல்கள் மீட்கப்பட்டதாக பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2023ஆம் அண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி, ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 1200-க்கும் மேல் கொல்லப்பட்டனர். 250 பேரை பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றனர். உயிரிழந்த சிலரின் உடல்களையும் கடத்திச் சென்றனர்.
அப்போது உயிரிழந்த இலான் வெய்ஸ் என்பவரின் உடலும், மற்றொரு அடையாளம் தெரியாத உடலும் தற்போது மீட்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. இலான வெய்ஸின் மனைவி மற்றும் குழந்தைகள் பணயக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்டன. 2023 நவம்பர் மாத போர் நிறுத்தத்தின்போது அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
தற்போது ஹமாஸ் அமைப்பிடம் 50 பேர் பிணைக்கைதிளாக இருப்பார்கள் எனக் கூறப்படுகிறது. இதில் 20 பேர் மட்டுமே உயிரோடு இருப்பதாக நம்பப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன், பணயக்கைதி ஒருவர் உடல் மெலிந்த நிலையில், சுரங்கத்தில் குழி தோண்டுவதுபோன்ற வீடியோ வெளியிடப்பட்டிருந்தது.
காசா சிட்டியை போர் பகுதியாக அறிவித்து, இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. காசா சிட்டியில் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து முகாமில் வசித்து வருகின்றனர். இவர்கள் பசியால் உயிரிழந்து வரும் அபாய நிலை ஏற்பட்டுள்ள நிலையில், உலக நாடுகள் வற்புறுத்தலாம் அத்தியாவசிய பொருட்கள் தற்போது கொண்டு செல்லப்படுகிறது. தற்போது போர்ப் பகுதி என அறிவிக்கப்பட்டுள்ளதால், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்வதற்கு ஆபத்து ஏற்படும் என அஞ்சப்படுகிறது.