மேற்கு ஆசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக மோதல் நீடித்து வருகிறது. மற்றொரு மேற்கு ஆசிய நாடான லெபனானில் இருந்து செயல்படும் ஈரான் ஆதரவு பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல்லா, ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஈரான் மக்களுக்கு வீடியோ ஒன்றை வெளியிட்டார். வீடியோவில், அவர் கூறினார்: “இஸ்ரேலை விட ஈரானின் கமேனி பயப்பட வேண்டிய ஒன்று. அது நீங்கள் தான்… ஈரான் மக்கள். அதனால்தான் அவர்கள் உங்கள் நம்பிக்கைகளை நசுக்குவதற்கும் உங்கள் கனவுகளை நசுக்குவதற்கும் அதிக நேரத்தையும் பணத்தையும் செலவிடுகிறார்கள்.”
நம்பிக்கையை இழக்காதீர்கள், சுதந்திர உலகில் இஸ்ரேலும் மற்றவர்களும் உங்களுடன் நிற்கிறார்கள் என்று அவர் வலியுறுத்தினார். இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வெளியிட்டுள்ள இந்த வீடியோ சர்வதேச அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.