இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை வெள்ளை மாளிகையில் திங்கள்கிழமை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, உலகையே உலுக்கி வரும் அமெரிக்காவின் கடும் வரிகளை குறைக்குமாறு நெதன்யாகு கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.

இரு தலைவர்களும் பாலஸ்தீனம், ஹமாஸ் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுடன் பதற்றமான சூழல் குறித்து விவாதித்ததாகவும் நம்பப்படுகிறது. சந்திப்பின் போது பேசிய நெதன்யாகு, “என்னை மீண்டும் ஒருமுறை வெள்ளை மாளிகைக்கு அழைத்ததற்கு ஜனாதிபதிக்கு நன்றி. அவர் தவிர்க்க முடியாத நண்பர். அவர் எங்களின் சிறந்த ஆதரவாளர். அவர் சொல்வதை அவர் செய்கிறார். அமெரிக்காவுடனான வர்த்தக பற்றாக்குறையை விரைவில் நீக்குவோம். நாங்கள் அதைச் செய்ய விரும்புகிறோம்.
இது சரியான செயல் என்று நாங்கள் நினைக்கிறோம். வர்த்தக தடைகளையும் அகற்ற உள்ளோம். இஸ்ரேல் பல நாடுகளுக்கு முன்னுதாரணமாக திகழ முடியும் என்று நான் நம்புகிறேன்.