அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய வேட்பாளர் ஜோ பிடனுக்கு பதிலாக கமலா ஹாரிஸ் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பரில் நடைபெறவுள்ள நிலையில், இந்த தேர்தலில் ஜோ பிடன் மற்றும் டொனால்ட் டிரம்ப் இருவரும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டு, சமீபத்தில் இருவரும் நேருக்கு நேர் விவாதம் செய்த நிலையில், ஜோ பிடன் விவாதம் செய்ய போராடியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜோ பிடனின் மோசமான வாத திறமையால் வெற்றி பெறுவது கடினம் என்றும், எனவே அவர் போட்டியில் இருந்து விலக வேண்டும் என்றும் அவரது கட்சிக்குள் குரல்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸ் களமிறங்குவார் என தெரிகிறது. டிரம்பும், கமலா ஹாரிஸும் ஏற்கனவே மோதிக்கொண்டதாகவும், மீண்டும் மோத வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், ஜோ பிடனுக்கு 81 வயதாகிவிட்டதால், அவரது வயது அமெரிக்க அதிபர் பதவிக்கு ஏற்றதல்ல என அவரது ஜனநாயக கட்சி கூறி வருவதாக கூறப்படுகிறது.