ஏமன்: ஏமன் நாட்டில் சிறையில் இருக்கும் கேரளாவை சேர்ந்த நர்ஸ் நிமிஷாவுக்கு வரும் 16-ம் தேதி தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏமன் சிறையில் இருக்கும் கேரள நர்ஸ் நிமிஷா பிரியா, இந்த மாதம் 16-ம் தேதி தூக்கிலிட இருப்பது இந்தியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2017-ல் தலால் அப்தோ மெஹ்தி என்பவரை கொலை செய்ததாக அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
குற்றம் உறுதியானதால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. நிமிஷாவின் தண்டனையை குறைக்க அவரது தாயார் போராடி வந்தார். எனினும் தூக்கிலிடப்படும் தேதி தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது இந்திய மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தூக்கு தண்டனை குறைத்து சிறை தண்டனை வழங்குமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கைகள் எழுத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஏமன் அரசு இதுகுறித்து எவ்வித பதிலும் தெரிவிக்காமல் உள்ளதாகவும் தெரிய வருகிறது.