இலங்கை: இலங்கை கடற்படை சிறைபிடித்த 34 தமிழக மீனவர்களை பிப்.5-ம் தேதி வரை சிறையில் அடைக்க கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தலைமன்னார் – தனுஷ்கோடி இடையே மீன் பிடித்துக்கொண்டிருந்த, ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 34 மீனவர்களை இலங்கை கடற்படை நேற்று கைது செய்த நிலையில், அவர்களை வரும் பிப்ரவரி 5ம் தேதி வரை சிறையில் அடைக்க கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில் 34 மீனவர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்ககோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.