மாஸ்கோ: ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மக்கள் தொகை முக்கிய பங்கு வகிக்கிறது. உலகின் பிற நாடுகள் சீனாவையும் இந்தியாவையும் கண்டு அஞ்சுவதற்கு மிக முக்கியக் காரணம், இந்நாடுகளின் மக்கள்தொகைப் பெருக்கம்தான்.
இராணுவம் போன்ற மனிதவளம் மிகுந்த துறைகளுக்கு ஒரு பெரிய மக்கள்தொகை அவசியம். சுருங்கி வரும் மக்கள்தொகை கொண்ட நாடுகள் ராணுவம் போன்ற அத்தியாவசியத் துறைகளுக்குக் கூட மனிதவளத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றன.
அந்த வகையில் ரஷ்யா மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் நடக்கும் போருக்கு ரஷியா வீரர்கள் இல்லாமல் தவித்து வருகின்றனர். எதிர்காலத்தில் நிலைமை மோசமாகும் என கணிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் கடந்த 1990-ம் ஆண்டு முதல் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. பிறப்பு விகிதத்தை அதிகரிக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளுமாறு நாட்டு மக்களுக்கு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஜனாதிபதி புடின் ஒரு படி மேலே சென்று, நேரம் கிடைக்கும் போதெல்லாம் காதல் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அதிபர் புதின் கூறியதாவது:-
உக்ரைனுடன் நடந்து வரும் போர் காரணமாக, அந்நாட்டு மக்கள் தொகை குறைந்துள்ளது. இது தேசத்தின் எதிர்காலத்திற்கு பேராபத்து. வேலையில் பிஸியாக இருப்பது சரியான காரணம் அல்ல. குழந்தை பிறப்பதற்கு வேலை ஒரு தடையாக இருக்கக்கூடாது.
மதிய உணவு மற்றும் வேலை நேரத்தில் காபி இடைவேளையின் போது உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அன்பு செய்து குழந்தைகளைப் பெறுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.
ஜனவரி 1, 2023 நிலவரப்படி ரஷ்யாவின் மக்கள் தொகை 14.64 கோடி. ரஷ்யாவின் தற்போதைய கருவுறுதல் விகிதம் ஒரு பெண்ணுக்கு தோராயமாக 1.5 குழந்தைகள். இது மக்கள்தொகை நிலைத்தன்மைக்குத் தேவையான 2.1ஐ விடக் குறைவு.